சுடச்சுட

    

    குமரி குகநாதீஸ்வரர் கோயிலில்1008 சங்காபிஷேகம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 16th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் புரட்டாசி திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுôமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள குகநாதீஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் அமைந்துள்ள சிவன் சிலை குமரி மாவட்டத்திலேயே மிகவும் பெரியதாகும். இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர நாளன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    நிகழாண்டு சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம், காலை 7 மணிக்கு கோமாதா பூஜை, காலை 9 மணிக்கு 1008 சங்குபூஜை, காலை 10 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பகல் 12.30 மணிக்கு வாகன பவனியை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai