சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் 14.59 லட்சம் வாக்காளர்கள்:வரைவு பட்டியல் வெளியீடு

  By நாகர்கோவில்,  |   Published on : 16th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் புதன்கிழமை வெளியிட்டார். இதனடிப்படையில் மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 14,59,064 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

  தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

  நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. உதயகுமார், சார்-ஆட்சியர் சங்கர்லால் குமாவத், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அருண் சத்யா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

  பின் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2014 தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது குமரி மாவட்டத்தில் 7,39,328 ஆண் வாக்காளர்களும், 7,23,044 பெண் வாக்காளர்களும் இதரர் 70 பேர் என மொத்தம் 14,62,442 வாக்காளர்கள் இருந்தனர். 28.5.2014 முதல் தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

  இதில் மொத்தம் 6,202 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். புதிதாக 2,824 பேர் சேர்க்கப்பட்டனர். இதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. தற்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 15.10.2014 முதல் தொடங்க உள்ளதால் படிவங்கள் 6,7,8, 8ஏ சார்-ஆட்சியர், கோட்டாட்சியர், நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்பட உள்ளன. தேர்தல் நேரத்தில் தயார் செய்யப்பட்ட வருகை தராதவர்கள், மாறுதலானவர்கள் மற்றும் இறந்தவர்கள் பட்டியலின் படி நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் சரியான முறையில் பிரதிபலிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்-லைனிலும் படிவங்களை ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். படிவங்களை வழங்க வசதியாக சிறப்பு முகாம்கள் அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 609 அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற உள்ளன.

  இந்தப் பணிகளை மேற்கொள்ள 37 மண்டல அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் உள்ள 4 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்

  ஆட்சியர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai