சுடச்சுட

  

  கேரள அரசுப் பேருந்து பழுது:போக்குவரத்து பாதிப்பு

  By களியக்காவிளை,  |   Published on : 16th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களியக்காவிளை சந்திப்பில் புதன்கிழமை பிற்பகலில் கேரள அரசுப் பேருந்து பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  கேரளத்தில் இயக்கப்படும் அம் மாநில அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதால் அப் பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பது அரிதாக உள்ளது. இந் நிலையில் புதன்கிழமை பிற்பகலில் திருவனந்தபுரத்தில் இருந்து களியக்காவிளைக்கு வந்த கேரள அரசின் மிதவைப் பேருந்து, பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதியில் வந்த போது பழுதாகி நின்றது.

  இதையடுத்து பாறசாலை பணிமனையிலிருந்து தொழில்நுட்ப பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேரத்துக்குப் பின் பேருந்து பழுது நீக்கப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட பழுது காரணமாக பேருந்து இயங்காமல் நின்றதாம். களியக்காவிளை பேருந்து நிலைய, நுழைவு வாயில் பகுதியில் இப்பேருந்து பழுதாகி நின்றதால் பேருந்து நிலையத்துக்குள் மற்ற பேருந்துகள் வந்து செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து

  பாதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai