சுடச்சுட

    

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்சிறை வட்டாரக் குழுக் கூட்டம் நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் இ.எம்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்றது.

    வட்டாரக் குழு உறுப்பினர் சந்தோஷ் தலைமை வகித்தார். வட்டாரக் குழுத் தலைவர் குமரேசன், செயலர் விக்டர், பொருளாளர் எஸ்கலின், துணைச் செயலர் சிவகுமார், மாவட்டச் செயலர் ரெஜிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் குழு உறுப்பினர்கள் ராபர்ட், ரமேஷ், ஜீன்பால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட குடும்ப அட்டைகள் வழங்கவேண்டும். நவ. 12 ஆம் தேதி மாநில அளவில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரக் குழு சார்பில் 100 பேர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai