Enable Javscript for better performance
தீவிரவாதத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    தீவிரவாதத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 16th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீவிரவாதத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அக்.15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15 ஆம் தேதி வரை தீவிரவாதத்துக்கு எதிராக பிரசாரம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி மாநிலத் தலைவர் பி.ஜெயினுல் ஆப்தின் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட தலைவர் ஜலீல், செயலர் ஹமீது, பொருளாளர் ஜாபர் தலைமையில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் மந்தாரம்புதூர் கிளைத் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் நிர்வாகிகள் சலீம், அப்துல்லா, முஜிபுர் ரஹ்மான், ஹைதர் அலி, சைபுல்லா உள்ளிட்டோர் சுற்றுலாப் பயணிகளிடம் தீவிரவாதத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai