சுடச்சுட

    

    நாகர்கோவிலில் வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By நாகர்கோவில்,  |   Published on : 16th October 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஊர்வலத்தை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பாண்டியம்மாள், மாவட்ட இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் வீ. வேணுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செட்டிகுளம் வழியாக இந்துக் கல்லூரிக்கு வந்த பேரணியை, கல்லூரித் தலைவர் ஆறுமுகம் பிள்ளை நிறைவு செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai