சுடச்சுட

    

    நாளை குரியன்விளை கோயிலில் பந்திருநாழி பொங்கல் வழிபாடு

    By களியக்காவிளை,  |   Published on : 16th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (அக்.17) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.

    இக் கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெற்று வருகிறது. இவ் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் கோயிலில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், மகா சுதர்ஸன ஹோமம், அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் முத்துக்குடை அணிவகுப்புடன் சுயம்பு எழுந்தருளல் நடைபெறும். இதைத் தொடர்ந்து பொங்காலை களத்தில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது. இவ் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டித் தலைவர் விக்கிரமன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai