சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

  மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாதை நிலையில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை திருவட்டாறு, திற்பரப்பு, களியல், கடையல், பேச்சிப்பாறை, கோதையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

  மேலும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை பரவலாக பெய்து வரும் நிலையில் வாழை, மரச்சீனி, தென்னை மற்றும் ரப்பர் மறுநடவு செய்துள்ள விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

  சாலையில் தேங்கிய மழைநீர்: குலசேகரம்-திற்பரப்பு பிரதான சாலையில் திற்பரப்பு சந்திப்பு அருகே சாலை வழியாகப் பாய்ந்து வரும் தண்ணீர் அப்பகுதியில் ஆற்றுக்குச் செல்லும் வகையில் மடை இருந்தது. தற்போது தனியார்கள் அந்த மடைகளை மூடியதால் அப்பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அப்பகுதியில் மழைக் காலங்களில் நீர் தேங்கி, சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு மாற்று மாற்றுப் பணிகளைச் செய்ய பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினரை பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  புதன்கிழமை இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

  களியக்காவிளை: களியக்காவிளை, நித்திரவிளையில் புதன்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது.இப்பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை மாலையில் வானில் திடீரென மழைமேகம் சூழ்ந்தது, தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் களியக்காவிளை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இம்மழை சுமார் அரை மணிநேரம் நீடித்தது.

  நித்திரவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இப் பகுதிகளில் மாலையில் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபுரம், குழித்துறை, மடிச்சல், அதங்கோடு, மங்காடு, ஆலங்கோடு, நித்திரவிளை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai