Enable Javscript for better performance
பிரமோஸ் விஞ்ஞானிக்கு நாளை இந்துக் கல்லூரியில் பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    பிரமோஸ் விஞ்ஞானிக்கு நாளை இந்துக் கல்லூரியில் பாராட்டு விழா

    By நாகர்கோவில்,  |   Published on : 16th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (அக். 17) பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளைக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி முன்னாள் மாணவரும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் விஞ்ஞானியும், பிரமோஸ் விஞ்ஞானியுமான சிவதாணுபிள்ளைக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை(அக்.17) காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவிற்கு ஆட்சிமன்றக் குழுத் தலைவர் பி. ஆறுமுகம்பிள்ளை தலைமை வகிக்கிறார். லால்பகதூர் சாஸ்திரி விருது பெற்ற அ. சிவதாணுபிள்ளை விழாவில் கௌரவிக்கப்படுகிறார். வரலாற்றுத்துறை பேராசிரியர் ஆர். ராஜலிங்கம் மற்றும் பேராசிரியர் ஆ. ஹரிகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். ஏற்புரைக்கு பின் கல்லூரி மாணவ, மாணவியருடன் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கலந்துரையாடுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai