சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியர் பலத்த காயமடைந்தனர்.

    கேரளம் பாறசாலை அருகேயுள்ள ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் மகன் பினு (27). இவரது மனைவி அகிலா (26). இருவரும் புதன்கிழமை மார்த்தாண்டத்துக்கு பைக்கில் சென்றனர். களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில், எதிரில் வந்த லாரி பினுவின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தம்பதியர் பலத்த காயமடைந்தனர்.

    இருவரையும் அப்பகுதியினர் மீட்டு பாறசாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் மஞ்சவிளை பகுதியைச் சேர்ந்த வினித்தை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai