Enable Javscript for better performance
வாகனச் சோதனைரூ. 5 லட்சம் அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கேரள பதிவெண் கொண்ட வாகனங்களில் இருந்து ரூ. 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கும், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் மே.ர. முகுந்தன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை இரவு களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, 4 கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் உரிய வரி செலுத்தாமல் இயங்கியது கண்டறியப்பட்டது. இதில் 3 ஆம்னி பேருந்துகளிலிருந்து தலா ரூ. 65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மற்றொரு ஆம்னி பேருந்து அபராதம் செலுத்தாததையடுத்து அவ் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து வரி செலுத்தாமல் அதிக பாரம் ஏற்றிவந்த கேரள பதிவெண் கொண்ட 15 வாகனங்கள் கண்டறியப்பட்டு அவ்வாகனங்கலிலிருந்து மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அனுமதிச்சீட்டு மற்றும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட மரத்தடிகள் ஏற்றிவந்த கேரள பதிவெண் கொண்ட லாரியிலிருந்து ரூ. 20 அபராதம் வசூலிக்கப்பட்டது. வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன வரியாக ரூ. 17 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    மேலும் தாற்காலிக அனுமதிச் சீட்டு இல்லாமல் தமிழகத்தில் இயங்கிய கேரள பதிவெண் கொண்ட வாகனங்களிலிருந்து என மொத்தம் ரூ. 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai