சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையில் 380 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் வாகனச் சோதனை மட்டுமன்றி வர்த்தக நிறுவனங்கள் முன் கூட்ட நெரிசலை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தவர்கள், ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் வந்தவர்கள் என 380 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க ஜவுளி கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai