Enable Javscript for better performance
ஆரல்வாய்மொழி, குழித்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் மறியல்: 52 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆரல்வாய்மொழி, குழித்துறையில் இந்திய கம்யூனிஸ்ட் மறியல்: 52 பேர் கைது

    By நாகர்கோவில்  |   Published on : 17th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆரல்வாய்மொழியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 30 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுப்பிரமணியன், கோபி, வீரபாகு, அனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விலைவாசி உயர்வு, வறட்சி நிவாரணம், வீடு கட்ட ரூ.10 லட்சம் நிதி உதவி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    களியக்காவிளை:÷குழித்துறையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    குழித்துறை சிண்டிகேட் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மேல்புறம் ஒன்றியச் செயலர் எஸ். சசீதரன்நாயர் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் கே.சி. துரைராஜ் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.

    மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் ஏ. டென்னிசன், கிளைச் செயலர்கள் கே. சந்திரன், விஜய்ஸ்டாலின், நிர்வாகிகள் சந்தோஷ், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கியின் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் அன்புபிரகாஷ் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 22 பேரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai