சுடச்சுட

    

    கருங்கல்லில் உள்ள குட்விஷன் தொண்டு நிறுவனம் மற்றும் கூட்டுறவுச் சங்கம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான விற்பனை பயிற்சி முகாம் தொடங்கியது.

    குட்விஷன் தொண்டு நிறுவன அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனர்-தலைவர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குணசீலன் முன்னிலை வகித்தார்.

    பயிற்சியை மாவட்ட கூட்டுறவு திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் செந்தில்குமார் தொடங்கிவைத்துப் பேசினார். கூட்டுறவு பயிற்சி ஆய்வாளர் தனிஸ்லாஸ் பொருள் விற்பனை குறித்து பயிற்சியளித்தார். இதில், சுமார் 40 பெண்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai