Enable Javscript for better performance
கருங்கல் பகுதியில் மிதமான மழை- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கருங்கல் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டமுடன் காணப்பட்டது. பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கருங்கல், பாலூர், வெள்ளியாவிளை,பாலப்பள்ளம், ஆலஞ்சி,கப்பியறை, செல்லங்கோணம், கருக்குப்பனை, மிடாலக்காடு, பள்ளியாடி, நட்டாலம், முள்ளங்கினாவிளை, கிள்ளியூர், தொலையாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    எனினும் இப்பகுதிகளில் உள்ள குளம்,குட்டைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai