Enable Javscript for better performance
கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    சுசீந்திரம் அருகே தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

    சுசீந்திரம் அருகே கோழிகோட்டுப்பொத்தை ஆதலவிளை வாய்க்காலில் வியாழக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இறந்து கிடந்தவர் அமராவதிவிளையைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வர்கீஸ் (19) என்பது தெரியவந்தது. அவர் செண்பகராமன்புதூரில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்ததும், அவர் விஷம் குடித்து இறந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai