சுடச்சுட

  

  குமரியில் பாதாள சாக்கடை திட்ட ஆய்வுப் பணி

  By கன்னியாகுமரி,  |   Published on : 17th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரியில் ரூ. 27 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்துக்கான ஆய்வுப்பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

  கன்னியாகுமரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இங்கு 100-க்கும் அதிகமான தங்கும் விடுதிகள், கடைகள், குடியிருப்புகள் உள்ளன. மழைக் காலங்களில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.

  இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

  இதையடுத்து இத்திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான வரைபட மாதிரிகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 அரை ஏக்கர் நிலப்பரப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

  மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் சுகி பிரேமலா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (நாகர்கோவில்) விஜயகுமார், உதவி பொறியாளர் சங்கர், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜார்ஜ், பேரூராட்சி இளநிலை பொறியாளர் சிவசங்கரலிங்கம், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் க.அம்புரோஸ் உள்ளிட்டோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai