சுடச்சுட

    

    என்.எச்.47 புறவழிச் சாலை பாதிக்கப்பட்டோர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞர் ஜார்ஜ் தலைமை வகித்தார். இதில் வழக்குரைஞர் சுலீப், சுப.உதயகுமார், அகஸ்டின் செல்வராஜ், வழக்குரைஞர் வெற்றிசெல்வன், தர்மராஜ் உள்ளிட்டோர் பேசினர். இப்போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து புறவழிச்சாலையால் பாதிக்கப்பட்ட பலர் பங்கேற்றனர்.

    என்.எச். புறவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு நடைமுறையில் இருக்க கூடிய தேசிய நெடுஞ்சாலை 47-ஐ நான்குவழிச் சாலையாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai