Enable Javscript for better performance
நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    நாகர்கோவில் நகராட்சி செம்மாங்குடி சாலை, பிரிமியர் ஸ்டுடியோ தெரு, அண்ணா பேருந்து நிலைய நுழைவுவாயில், அலெக்சந்திரா பிரஸ் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் மிகுந்துள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், நகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை காலை ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றியது.

    நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அலெக்சந்திரா பிரஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது அங்குள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai