Enable Javscript for better performance
பளுகல் அருகே ஆட்டோவுக்கு தீவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பளுகல் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பளுகல் காவல் சரகம், கொட்டறக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கோபகுமார் (43). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனக்குச் சொந்தமான ஆட்டோவை இரு நாள்களுக்கு முன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு, சகோதரியின் வீட்டுக்குச் சென்றாராம்.

    திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai