Enable Javscript for better performance
பளுகல் சார் பதிவாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    பளுகல் சார் பதிவாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணி

    By களியக்காவிளை  |   Published on : 17th October 2014 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பளுகல் பேரூராட்சிப் பகுதியில் நகர பாஜக சார்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

    பிரதமரின் "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் பளுகல் நகர பாஜக சார்பில் சார் பதிவாளர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து கூனம்பனை முதல் கண்ணுமாமூடு சந்திப்புவரை சாலையோரக் குப்பைகளை அகற்றி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இளைஞரணித் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். சுகாதாரப் பணியை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் தொடங்கிவைத்தார்.

    இதில், கட்சி நிர்வாகிகள் மதுசூதனன், ஷாஜி, ஷிபு, பிரதீப், ராஜேஷ், விமல், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai