சுடச்சுட

    

    பள்ளியாடி அருகே சரக்கு ரயில் பழுது: ரயில் போக்குவரத்து பாதிப்பு

    By கருங்கல்  |   Published on : 17th October 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளியாடி அருகே சரக்கு ரயில் திடீரென பழுதானதால் நாகர்கோவில் -திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

    கேரளம் மாநிலம் கொல்லத்திலிருந்து மதுரைக்கு புதன்கிழமை இரவு ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு பள்ளியாடி அருகே ஆலத்துறை பகுதியில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது.

    இதனால் நாகர்கோவில் -திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் திருவனந்தபுரத்திலிருந்து பணியாளர்களை வரவழைத்து இன்ஜினின் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் காலை 6 மணிக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai