சுடச்சுட

    

    களியக்காவிளையில் புதுப்பட, ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்ததாக கடை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

    களியக்காவிளையில் உள்ள சில சி.டி. கடைகளில் புதுப்பட, ஆபாச சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் அன்புபிரகாஷ் தலைமையிலான போலீஸார் களியக்காவிளை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது 40 புதுப்பட சி.டி.க்களும், 8 ஆபாச சி.டி.க்களும் என மொத்தம் 48 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கடை ஊழியரான மேக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷிபு (27) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai