சுடச்சுட

    

    மகாதானபுரத்தில் சனிப்பெயர்ச்சி பரிகார யாகம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 17th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மகாதானபுரம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சனிப்பெயர்ச்சி பரிகார யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    உலக நன்மைக்காகவும், பக்தர்களின் தோஷம் அகலவும் இக்கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மர் சன்னதி முன் சனிப்பெயர்ச்சி பரிகார யாகம் நடைபெற்றது.

    இதையொட்டி காலை 6.30 மணிக்கு நிர்மால்ய பூஜை, 7 மணிக்கு தீபாராதனை, காலை 8.30 மணிக்கு சங்கல்ப பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகம் தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு மகா பூர்ணாஹூதி பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராகவேந்திரா மோகன் செய்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai