சுடச்சுட

  

  மாற்றுத் திறன் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

  By நாகர்கோவில்,  |   Published on : 17th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

  சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு இல்லம், சத்துணவு மையம் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டார்.

  அப்போது சத்துணவு மையத்தில் உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து அவர் சோதனை நடத்தினார்.

  பின்னர் ராஜாக்கமங்கலம் அருகே குளத்துவிளை அரசு தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வரும் பகல்நேர பராமரிப்பு மையத்தையும் அவர் பார்வையிட்டார். குழந்தைகளின் கற்றல் திறனையும் சோதித்தார்.

  அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆதார வளமையத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு முட்டைகள் தரமானதாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

  ஆய்வின்போது அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித் திட்ட அலுவலர் மேசியாதாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai