Enable Javscript for better performance
குமரியில் பட்டாசு விற்பனை ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் பட்டாசு விற்பனை ஆய்வுக் கூட்டம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 18th October 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியில் பட்டாசு விற்பனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடை வியாபாரிகளுடன் தீயணைப்பு அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய உப கோட்டத்துக்கு உள்பட்ட 12 பட்டாசுக் கடை வியாபாரிகள் இதில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், பட்டாசுக் கடைகளின் விற்பனை உரிமம் சரி பார்க்கப்பட்டு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்கும் போது விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    தடை செய்யப்பட்டுள்ள சீனப் பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து அமிர்தா வித்யாலயம், ஒற்றையால்விளை அரசுப் பள்ளி மாணவர்களிடம் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தீயணைப்பு நிலைய அதிகாரிகள் நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai