சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

  By கன்னியாகுமரி,  |   Published on : 18th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து குமரி மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

  கன்னியாகுமரியில் பேரூர் அதிமுக செயலர் பி.வின்ஸ்டன் தலைமையில் அதிமுகவினர் கல்லூரி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். இதில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் எஸ்.பீட்டர், மாவட்ட மகளிரணி பொருளாளர் கீதாஷிவானி, முன்னாள் ஒன்றியச் செயலர் டி.அரிகிருஷ்ணபெருமாள், பேரூர் ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.ஆனந்த், பேரூர் இளைஞரணிச் செயலர் ரெயான்ஸ், ஒன்றிய இலக்கிய அணி இணைச் செயலர் பகவதியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  தக்கலை: மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தக்கலை அதிமுக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

  நகரச் செயலர் ஏ.எஸ் ஜெகபர்சாதிக் இனிப்பு வழங்கினார். முன்னதாக அதிமுக 43ஆவது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம் தலைமையில், பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி, மாவட்ட துணைத் தலைவர் கே.ஏ.சலாம், துணைச் செயலர் மேரி கமலாபாய், மீனவரணிச் செயலர் யுஜின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  திங்கள்நகர், அழகியமண்டபம், சாமியார்மடம், குமாரபுரம், இரணியல், திருவிதாங்கோடு, திக்கணங்கோடு, குருந்தன்கோடு, சித்திரங்கோடு, வேர்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

  களியக்காவிளை: விளவங்கோடு தொகுதிச் செயலர் கே.ஜி. உதயகுமார் தலைமையில், அதிமுகவினர் இனிப்பு வழங்கினர். மேல்புறம் ஒன்றிய துணைத் தலைவர் ஆல்பர்ட்சிங், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் வி. நசீர், பேரூர் அவைத் தலைவர் ராபர்ட் வில்சன், ஊராட்சி கிளைச் செயலர் பிஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  குலசேகரம்: ஆற்றூர் சந்திப்பில் பட்டாசு வெடித்த அதிமுகவினர், ஊர்வலமாக திருவட்டாறு, குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை, சித்திரங்கோடு உள்ளிட்டப் பகுதிகளுக்கு சென்று பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திருவட்டாறு ஒன்றியச் செயலர் சுதர்சன் தலைமை வகித்தார். இதில், கட்சி நிர்வாகிகள் திலக்குமார், ஜாகீர் உசேன், குலசேகரம் பேரூர் செயலர் முருகன், அருவிக்கரை பேரூர் செயலர் த. லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கருங்கல்: கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் மேரிகமலபாய் முன்னிலை வகித்தார். கருங்கல் பேருந்து நிலையம், ஆட்டோ நிலையம், ராஜீவ்காந்தி சந்திப்பு, காமராஜர் சந்திப்பு பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலர் அலெக்சாண்டர், கிள்ளியூர் தொகுதி இணைச் செயலர் மரியதாஸ்,வில்பிரட், எட்வின், ஜோஸ்லின்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  புதுக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூர் செயலர் வெற்றிவேந்தன் தலைமை வகித்தார். முன்சிறை ஒன்றிய இளைஞரணிச் செயலர் குமார் முன்னிலை விகித்தார். புதுக்கடை பேருந்து நிலையம், ஆட்டோ நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில், குமரன், ஜார்ஜ், சிசில் அண்ணா ஆட்டோ ஒட்டுநர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai