சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை: படகுப் போக்குவரத்து தாமதம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 18th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியில் மழை காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தாமதமாகத் தொடங்கியது.

    கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை கனமழை பெய்தது. இதனால் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம்போல காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

    திருவள்ளுவர் சிலைக்கு இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. கடல் சீற்றம் காரணமாக கடைசி ஒரு மணி நேரம் படகுப் போக்குவரத்து தடைபட்டது.

    பயணிகள் கூட்டம்: மழை காரணமாக வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் திரிவேணி சங்கமம், காந்தி மண்டப சாலை, பேரூராட்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai