Enable Javscript for better performance
சாலையில் புதைந்த லாரி: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் புதைந்த லாரி: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    By குலசேகரம்  |   Published on : 18th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையல் அருகே ஆலஞ்சோலையில் மணல் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் புதைந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    கடையல் ஆலஞ்சோலை வழியாக மணல் ஏற்றிச் சென்ற ஒரு லாரி வெள்ளிக்கிமை காலையில் ஆலஞ்சோலை பகுதியில் திடீரென சாலையில் புதைந்து நின்றது. மேலும் அப்பகுதியில் சாலைப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் அந்த வழியாக இதர வாகனங்கள் செல்லமுடியவில்லை. இச்சம்பவத்தால் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை சுமார் 4 நான்கு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் இதர பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai