Enable Javscript for better performance
சின்னமுட்டம் அருகே 1,100 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சின்னமுட்டம் அருகே 1,100 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

    By கன்னியாகுமரி  |   Published on : 18th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் அருகே சுமை ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட 1,100 லிட்டர் மண்ணெண்ணெயை பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாத்துக்கு மண்ணெண்ணெய் கடத்திச் செல்லப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சின்னமுட்டம் பகுதியில் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படை வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது ஒற்றையால்விளை வழியாக வந்த சுமை ஆட்டோவில் 1,100 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai