சுடச்சுட

    

    களியக்காவிளையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடை ஊழியரை போலீஸார் கைதுசெய்தனர்.

    களியக்காவிளை காவல் ஆய்வாளர் அன்புபிரகாஷ் தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை இரவு களியக்காவிளை சந்தை அருகேயுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அங்குள்ள ஒரு கடையில் மொத்த விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 3 மூட்டை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கடை ஊழியர் ஒற்றாமரம் பகுதியைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் ரகீம் (26)-ஐ போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai