சுடச்சுட

    

    நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

    By நாகர்கோவில்,  |   Published on : 18th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெயலலிதா கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை தலைவர் எம். மீனாதேவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் சகாயராஜ், சீனு ஆகியோர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு சுப்பிரமணியன் சுவாமி மற்றும் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம்சாட்டி அவர்களுக்கு எதிராக கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.

    இதற்கு திமுக உறுப்பினர் சீதா முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக உறுப்பினர்கள் எப்படி திமுக தலைவரை குற்றம்சாட்டலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. மற்ற உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்தனர் இதற்கிடையே சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.

    நகராட்சி பூங்காவில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினர் சீனு, அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை மறைக்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    உறுப்பினர் சேவியர் பேசுகையில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தடுக்க வேண்டும் என்றும், தனது வார்டில் பணிகளை ஒப்பந்ததாரர் தாமதப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

    நகரில் நடமாடும் நாய்களை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற உறுப்பினர்களின் கேள்விக்கு, ஆணையர் (பொறுப்பு) சுரேஷ்குமார் பதில் அளித்து பேசியது:

    கடந்த 2013 ஆண்டு கணக்கெடுப்புப்படி நகரில் 1,206 நாய்கள் இருப்பது தெரிய வந்தது. இவற்றில் 611 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கிருஷ்ணன் கோயில் பகுதியில் தனியாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்துக்குள் நாய் தொல்லை கட்டுப்படுத்தப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai