Enable Javscript for better performance
பஞ்சலிங்கபுரத்தில் அரசு சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சலிங்கபுரத்தில் அரசு சிறப்பு மருத்துவ முகாம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 18th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் பஞ்சலிங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, வயிறு தொடர்பான பிரச்னைகள் மற்றும் இருதய நோய், காச நோய், குழந்தைகள் நலம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய், எலும்பு நோய், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் முகாமில் சிகிச்சை அளித்தனர்.

    முகாமினை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதுசூதனன், மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அலுவலர் சாலோடீசன், மாவட்ட புள்ளியியல் அலுவலர் (சுகாதாரம்) சுந்தர வேல்விழி, பஞ்சலிங்கபுரம் ஊராட்சித் தலைவர் ஆ.கண்ணன், துணைத் தலைவர் பி.காமராஜ், பேராசிரியர் நீலபெருமாள், வட்டார மருத்துவ அலுவலர் விஜயா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai