சுடச்சுட

  

  பட்டாசு கடைகளில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு

  By நாகர்கோவில்  |   Published on : 18th October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

  தீபாவளிக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் பட்டாசு மற்றும் இனிப்பு கடைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளது.

  பட்டாசு கடைகள் அமைக்க சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கடைகளை ஆய்வு செய்தனர். அரசின் விதிகளுக்குள்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா, தீயணைப்பு தடுப்புக் கருவி உள்ளதா என்பன உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

  இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறியது:

  மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஊழியர்களும் அன்று பணியில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  இரவு 10 மணிக்கு மேல் யாரும் பட்டாசு வெடிக்கக்கூடாது. அவரச உதவி தேவைப்பட்டால் தொலைபேசி எண் 101-ஐ அழைக்கலாம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai