சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து சிஐடியூ, விவசாயிகள் சங்கம் போராட்டம்

    By நாகர்கோவில்,  |   Published on : 18th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ, மற்றும் தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூதப்பாண்டியில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய தொழில் சங்க மையத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டத்துக்கு நிர்வாகிகள் மகாதேவன், மதார்மைதீன், சந்திரபோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ஐயப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்கி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

    கருங்கல்:÷ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க நினைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்; இத்திட்டப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.167 வழங்க வேண்டும்; விவசாயிகளுக்கு வழங்கி வந்த மின் இணைப்பை தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய தொழிற்சங்கம் சார்பில் கஞ்சிபானை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு இந்திய கட்டுமான சங்க கிள்ளியூர் வட்டாரச் செயலர் ரசல் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். பாலூர் ஊராட்சித் தலைவி கிருசாந்துமேரி, விவசாய தொழிற்சங்க ஒன்றியச் செயலர் கிருஷ்ணதாஸ், மரியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மாவட்டச் செயலர் தங்கமோகன் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். முந்திரி தொழிற்சங்க ஒன்றியத் தலைவர் அல்போன்ஸ்,விவசாய சங்கத் தலைவர் சார்லஸ், ஜான்ரோஸ், தையல் சங்கச் செயலர் மேரிசகாயம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    பின்பு பெண்கள் கஞ்சி பானையை உடைத்து கோஷமிட்டனர். மாவட்ட விவசாய சங்கச் செயலர் செல்லசாமி போராட்டத்தை முடித்துவைத்துப் பேசினார். இதில், பால்ராஜ், செல்லநாடார், ரசல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தக்கலை: கோழிப்போர்விளையில் அமைந்துள்ள தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. மற்றும் விவசாய சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் கஞ்சி பானை உடைக்கும் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஜடாஹெலன், அகில இந்திய விவசாய சங்கம் பேபி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜே.சைமன்சைலஸ் தொடங்கிவைத்தார். இதில், அகில இந்திய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜன், மாதர்சங்கம் சுஜாஜாஸ்மின், சி.ஐ.டி.யூ. காளிபிரசாத், டி.ஒய்.எப்.ஐ. பகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    களியக்காவிளை: முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற கஞ்சிப் பானை உடைக்கும் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க வட்டாரத் தலைவர் ரெஜி, சி.ஐ.டி.யூ. கூட்டுக்குழுத் தலைவர் டி. ஜெயா, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி ஆர். லலிதா, விவசாய சங்க வட்டாரச் செயலர் எம். சுரேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழு உறுப்பினர்கள் வல்சலம், ஜெயன், கிறிஸ்துதாஸ், ஸ்ரீதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே. அருளப்பா, வட்டாரச் செயலர் எஸ். சிதம்பர கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கே. தங்கமணி, விக்டர், நடைக்காவு ஊராட்சித் தலைவி மேரி ஸ்டெல்லா, எஸ். சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கொல்லங்கோடு வட்டாரக்குழுச் செயலர் பி. விஜயமோகன், கஞ்சிப்பானையை உடைத்து போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.'

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai