சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது. திருவட்டாறு மற்றும் மயிலாடியில் அதிகபட்சமாக 41.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகல்வரை வெயிலின் தாக்கம் இருந்தது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டது. இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 411 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 292 கன அடியும், சிற்றாறு-1 அணைக்கு 153 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்காக பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 510 கன அடி தண்ணீரும், சிற்றாறு-1 அணையிலிருந்து 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பதிவாகி உள்ள மழை அளவு (மி.மீ.) அளவு பேச்சிப்பாறை 9.8, பெருஞ்சாணி 11.4, சிற்றாறு1- 6.2, சிற்றாறு2- 4.4, பொய்கை 16.2, மாம்பழத்துறையாறு- 19, இரணியல் 14.4, ஆனைக்கிடங்கு- 14, குளச்சல் 18.6, குருந்தன்கோடு 22.8, அடையாமடை 28, கோழிப்போர்விளை- 8, திருவட்டாறு 41, முள்ளங்கினாவிளை 13, புத்தன் அணை 12, நாகர்கோவில் 6.4, பூதப்பாண்டி 22, சுருளோடு- 24, கன்னிமார் 7.8, ஆரல்வாய்மொழி 16.8, பாலமோர் 9.7, கொட்டாரம் 32.2. மயிலாடி- 41.2.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai