Enable Javscript for better performance
வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் 4 பேருக்கு 10ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் 4 பேருக்கு 10ஆண்டு சிறை

    By நாகர்கோவில்  |   Published on : 18th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முகமூடி அணிந்து வீட்டுக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி பள்ளி ஆசிரியை மற்றும் மகளிடம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

    புதுக்கடை அருகே அனந்தன்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (36). இவர் உண்ணாமலைக்கடை அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அர்ச்சனா, மகன் சந்தோஷ்.

    3.4.2004-ல் இவர்கள் வீட்டில் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்வாசல் வழியாக மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கத்தியுடன் உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த அனிதா, அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய மர்மநபர்கள் அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் வீட்டின் பீரோவில் இருந்த மொத்தம் 50 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இது குறித்து புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களான பருத்திவிளையைச் சேர்ந்த மணி (32), மூலக்கரை விளையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (32), காப்பிக்காட்டுவிளையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) மற்றும் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த ஷாபு (32)ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது போலீஸார் நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

    வழக்கை நீதிபதி முத்துசாரதா விசாரித்து, 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமாக தலா ரூ. 20 ஆயிரமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ஞானசேகர் ஆஜரானார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai