சுடச்சுட

  

  அஞ்சல் நிலையங்களில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு மையம்

  By நாகர்கோவில்  |   Published on : 19th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் ரயில் பயண சீட்டு முன்பதிவு மையங்கள் தொடங்க வேண்டும் என மத்திய தொலை தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

  இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். ரயில்களை நம்பியே இவர்கள் உள்ளனர். ஆனால் இம்மாவட்டத்தில் ரயில் பயணச்சீட்டுகள் பதிவு செய்யும் மையங்கள் மிக குறைவாக உள்ளன.

  எனவே நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குளச்சல், குலசேகரம், பூதப்பாண்டி, மணவாளக்குறிச்சி, குழித்துறை,தக்கலை, கருங்கல்,அருமனை, திருவட்டாறு, ராஜாக்கமங்கலம், புதுக்கடை, கொல்லங்கோடு உள்ளிட்ட அஞ்சல் நிலையங்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்து கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஆவண செய்வதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

  சாய் சப்சென்டர்: வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சர் உமாபாரதி உதவியுடன் குமரி மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை அலுவலகம் ஏற்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. அப்போதைய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விக்ரம் வர்மாவால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பின் அத்திட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

  இதைக் கண்டித்து பொன். ராதாகிருஷ்ணன் 2007 இல் உண்ணாவிரதம் இருந்தார். தமிழக அரசு கொடுத்த வாய்மொழி உத்தரவின்பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

  ஆனால் இதுவரை மாவட்டத்தில் சாய்சப்சென்டர் நிறுவப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மீண்டும் சாய்சப்சென்டர் கொண்டுவர வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து கேட்டுக் கொண்டுள்ளார். சாய் சப்சென்டர் விரைவில் குமரி மாவட்டத்தில் அமைய ஆவண செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai