சுடச்சுட

    

    ஓய்வூதியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்க வலியுறுத்தல்

    By நாகர்கோவில்,  |   Published on : 19th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டையை அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலர் பிறைசூடும்பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு பணச்செலவின்றி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 1.7.2014 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக சுமார் 7.50 லட்சம் ஓய்வூதியர்களிடமிருந்து ரூ.150 வீதம் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

    திட்டத்துக்கான அரசு ஆணை வெளியிடப்பட்ட 60 நாள்களுக்குள், மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அத்தாட்சி அடையாள அட்டையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 100 நாள்களுக்கு மேலாகியும் அறிவிக்கப்பட்ட படி, ஓய்வூதியர்களுக்கு அட்டை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் ஓய்வூதியர்கள் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது.

    எனவே புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டையை ஓய்வூதியர்களுக்கு விரைந்து வழங்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai