சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

    By களியக்காவிளை,  |   Published on : 19th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு களியக்காவிளை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுஜி தலைமை வகித்துப் பேசினார். சமுதாய நல செவிலியர் டி. வசந்தகுமாரி பேசினார்.

    கூட்டத்தில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா, எபோலா வைரஸ், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் குறித்தும் அவை பரவும் விதம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

    பகுதி சுகாதர செவிலியர் பி. சுசீலாபாய், சுகாதார ஆய்வாளர் டி.ஸ்ரீகுமார், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ், பேரூராட்சித் தலைவி டி.ஆர். ஆஷாடயானா, துணைத் தலைவர் ஜி. சுதீர்குமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai