சுடச்சுட

    

    பத்துகாணி அரசுப் பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்தில் காயமடைந்த சமையலாளர் அர்ஜூனன் (50) சனிக்கிழமை இறந்தார்.

    மேல்புறத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவர், பத்துகாணி அரசு உண்டுறை மேல்நிலைப் பள்ளி விடுதியில் சமையலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    இம்மாதம் 15 ஆம் தேதி காலையில் இவர் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ பரவியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அர்ஜூனன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து ஆறுகாணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai