சுடச்சுட

    

    நாகர்கோவிலில் வசந்த் அன் கோ புதிய கிளை திறப்பு

    By நாகர்கோவில்  |   Published on : 19th October 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் வசந்த் அன் கோ நிறுவனத்தின் 60 ஆவது கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கிளையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் திறந்துவைத்தார்.

    இதையடுத்து கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், வசந்த் அன் கோ உரிமையாளர் எச்.வசந்தகுமார், அவரது மனைவி தமிழ்ச் செல்வி, மகன் விஜய்வசந்த், அபுசாலிம், சாமிதோப்பு பையன்ராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பாலையா, ஜனதா தளம் தலைவர் முகமது இஸ்மாயில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.எம்.டி. செல்லத்துரை, குமரி முருகேசன், கண்ணாட்டுவிளை பாலையா, ஆமோஸ் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழா மற்றும் தீபாவளியையொட்டி இங்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. மேலும், பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பொருள்கள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai