சுடச்சுட

    

    பட்டணங்கால் பிரிவில் தண்ணீர் திறக்க தாமதம்: விவசாயிகள் அவதி

    By கருங்கல்,  |   Published on : 19th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டணங்கால் பிரிவில் தண்ணீர் திறக்காமல் தாமதப்படுத்துவதால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை அணையிலிருந்து பட்டணங்கால் பிரிவு பிரதான கால்வாய் குலசேகரம் தும்பகோடு பகுதியில் தொடங்கி மாத்தூர்,திருவட்டாறு, சுவாமியார்மடம், பள்ளியாடி வழியாக முள்ளங்கனாவிளை வந்துசேரும். அங்கிருந்து கால்வாய் புதுக்கடை பிரிவு, கருங்கல் பிரிவு என இரண்டாக பிரிகிறது.

    புதுக்கடை பிரிவுக்குள்பட்ட இலவுவிளை, கிள்ளியூர், ஐரேனிபுரம், புதுக்கடை, பைங்குளம்,விழுந்தயம்பலம், ஆப்பிகோடு வழியாக கீழ்குளம் வடக்கு கால்வாயில் சென்றடைகிறது. அங்கிருந்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் கலந்து தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியில் கடலில் கலக்கும்.

    கருங்கல் பிரிவு திப்பிரமலை, பாலூர், கருங்கல், மங்கலகுன்று, தேவிகோடு, மிடாலம், பூட்டேற்றி மீறி வழியாக மீண்டும் கீழ்குளம் வடக்கு வாய்க்காலில் வந்து தாமிரவருணி ஆற்றில் கலக்கும்.

    இக் கால்வாயின் பல இடங்களில் ஆங்காங்கே தனியார் ஆக்கிரமிப்புகளாலும், பொதுப்பணித் துறை நீராதார அமைப்பு முறையாக பராமரிக்காததாலும் கால்வாயானது புதர்மண்டி தூர்ந்து தண்ணீர் செல்லமுடியாமல் தடைபட்டு காணப்படுகிறது. இதனால் கடைமடை பகுதிவரை தண்ணீர் முறையாக செல்வதில்லை.

    இப்பகுதிகளில் சுமார் 2ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தென்னை, வாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் அனைத்துவகை பயிர்வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பட்டாணங்கால்வாயில் தண்ணீர் சுமார் 2 மாதங்களாக வரவில்லை. பருவமழையும் முறையாக பெய்யாததால் வாழை, பயிர்வகைகள் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    இதுகுறித்து மிடாலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் குணசீலன் கூறியதாவது:

    பட்டணங்கால் பிரிவில் முறையாக தண்ணீர் திறக்காமல் பொதுப்பணித் துறையினர் புறக்கணித்து வருகின்றனர். ஓராண்டாக பொதுப்பணித் துறை கருங்கல் பிரிவுக்கு உதவி பொறியாளர் இல்லை. இதனால் கால்வாய் பராமரிப்புப் பணிகள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கால்வாயில் தண்ணீர் திறக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களை தூர்வாரி, பழுதடைந்த மடைகளையும் சீரமைத்து விவசாயம் செய்ய வழிசெய்ய வேண்டும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai