சுடச்சுட

  

  மலைப் பகுதிகளில் இயக்கப்படும் பழுதான பேருந்துகள்

  By குலசேகரம்,  |   Published on : 19th October 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பழுதான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.

  குமரி மாவட்டத்தில் கோதையாறு, ஆறுகாணி, கீரிப்பாறை, சுருளகோடு, பனச்சமூடு, நெட்டா உள்ளிட்டவை மலைசார்ந்த பகுதிகளாகும். அண்மைக் காலமாக இப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பழுதடைந்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

  கடந்த சில மாதங்களுக்கு முன் பத்துகாணி அருகே ஒரு அரசுப் பேருந்து விபத்திற்குள்ளானதில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும், சில நாள்களுக்கு முன் அருமனையிலிருந்து நாகர்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து குலசேகரம் ஈஞ்சக்கோடு பகுதியில் உள்ள செங்குத்தான சாலையில் திடீரென பின்னோக்கி வந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலர் காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவங்களால் பயணிகள் அரசுப் பேருந்துகளில் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

  இதுகுறித்து குலசேகரம் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ் கூறியதாவது: குமரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் முன்பெல்லாம் தரமான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்போது பிற பகுதிகளில் இருந்து ஒதுக்கப்பட்ட பழுதான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  இப்பேருந்துகளில் இருக்கைகளும், கைப்பிடிக் கம்பிகளும் இல்லை. பேருந்து ஓட்டுநர் அமரும் இருக்கைகளும் சேதமடைந்து காணப்படுகின்றன.

  பல பேருந்துகளில் பிரேக் முழுமையாக இயங்காமல் பழுதான நிலையில் உள்ளதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

  எனவே இம்மாவட்டத்தில் தரமான பேருந்துகளை இயக்க அரசு முன்வருவதுடன், சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai