சுடச்சுட

    

    மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை: 2 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

    By களியக்காவிளை  |   Published on : 19th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்த்தாண்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், வரி செலுத்தாமல் இயங்கிய இரு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், அவ் வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனடிப்படையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் மற்றும் அலுவலர்கள் மார்த்தாண்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் வரி செலுத்தாமலும் அனுமதிச்சீட்டு இல்லாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் இயங்கிய இரு ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நிறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து வாகன வரி செலுத்தாமல் இயங்கிய இரு ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டு, அவ் வாகனங்களிலிருந்து வாகன வரியாக ரூ. 60 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் 10 ஆம்னி பேருந்துகளில் இதர குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவ் வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai