சுடச்சுட

  

  கோட்டாறு மறை மாவட்ட கூட்டாண்மை நிர்வாக கத்தோலிக்க பள்ளிகளின் மாணவர் கலை விழா முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு கத்தோலிக்க பள்ளிகளின் கூட்டாண்மை மேலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தக்கலை மறை மாவட்ட பள்ளிகளின் தாளாளர் அருள்தாஸ், முளகுமூடு மண்டலத் தாளாளர் மரிய வில்லியம், தக்கலை சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சேம்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  விழாவில் நடைபெற்ற போட்டிகளில் முளகுமூடு மறைவட்டத்துக்கு உள்பட்ட 9 மேல்நிலைப் பள்ளிகள், 7 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், 8 உயர்நிலைப் பள்ளிகள், 6 நடுநிலைப் பள்ளிகள், 22 தொடக்கப் பள்ளிகள் பங்கேற்றன.

  இதையடுத்து போட்டியில் வென்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள், அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளுக்கு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

  முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார். வெள்ளிகோடு ஆர்.சி.நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இருதயதாசன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai