Enable Javscript for better performance
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தேசிய மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தேசிய மாநாடு

    By கன்னியாகுமரி,  |   Published on : 19th October 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூட நம்பிக்கைகளுக்கு எதிரான 2 நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.

    கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளையில் நடைபெற்ற மாநாட்டை அந்த அமைப்பின் தலைவர் ஞானராபின்சன் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

    மனித வாழ்க்கையில் மூட நம்பிக்கைகள் தவிர்க்க முடியாததாகி விட்டது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையிலும் பல நாடுகளில் மூட நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளது கவலையளிப்பதாக உள்ளது.

    மதங்களின் அடிப்படையில் தோன்றிய மூட நம்பிக்கைகள் மனிதர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது.

    எனவே மூட நம்பிக்கைகளை அகற்ற சமுதாயத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.

    இம்மாநாட்டில் தில்லியைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ், லண்டனைச் சேர்ந்த தாரி கார்லின், அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார், நாகலிங்கம் பிள்ளை, முகைதீன் அப்துல்காதர், ஓ.எஸ்.கிருஷ்ணன், ஜெயால் அசரியா, இஸ்ரேல் செல்வவிநாயகம், லிவிங்டன், பிளாரன்ஸ் ராபின்சன், உளவியல் ஆலோசகர் ரத்னா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

    மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் நரேந்திர டபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதியை உலக மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அமைதி அறக்கட்டளை நிர்வாக அதிகாரி ஜா.தவராஜ் செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai