Enable Javscript for better performance
இரு மாநில தேர்தல் வெற்றிநாகர்கோவிலில்பாஜகவினர் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இரு மாநில தேர்தல் வெற்றிநாகர்கோவிலில்பாஜகவினர் கொண்டாட்டம்

    By நாகர்கோவில்,  |   Published on : 20th October 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நாகர்கோவிலில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் குவிந்த பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் இந்த வெற்றியைக் கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகராட்சித் தலைவர் எம். மீனாதேவ், பாஜக மாவட்ட துணைத் தலைவர் தேவ், கோட்டப் பொறுப்பாளர் வேல்பாண்டியன், நகரத் தலைவர் ராகவன், வரவேற்பு குழுத் தலைவர் ராஜன், மகளிரணி நிர்வாகி உமாபதி, நிர்வாகிகள் அஜித் குமார், ஜெகத் செல்வன், முருகன், எஸ்.எஸ். மணி, அருள் லிங்கம், நகராட்சி உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai