சுடச்சுட

    

    கடத்த முயன்ற 250 லிட்டர்மண்ணெண்ணெய் பறிமுதல்

    By கன்னியாகுமரி,  |   Published on : 20th October 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி அருகே சுமை ஆட்டோவில் கடத்த முயன்ற 250 லிட்டர் மண்ணெண்ணெயை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரம் சந்திப்பில் இருந்து, சுமை ஆட்டோ மூலம் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமை ஆட்டோவை போலீஸார் சோதனை செய்தபோது 250 லிட்டர் மண்ணெண்ணெய் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமை ஆட்டோ மற்றும் மண்ணெண்ணெய் கேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தப்பி ஓடிய சுமை ஆட்டோ ஓட்டுநரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai