Enable Javscript for better performance
கால்வாயில் பாய்ந்த ஆம்னி வேன்- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கால்வாயில் ஆம்னி வேன் பாய்ந்தது.

    கொச்சுவீட்டுப்பாறையைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ். ஓவியரான இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் குலசேகரத்துக்குச் சென்று விட்டு, ஆம்னி வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தும்பகோடு அருகே கோதையாறு இடதுகரைக் கால்வாய் கரையோரமாக உள்ள சாலை வழியாக இவர் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன், அப்பகுதியில் நின்ற மின்கம்பத்தை உடைத்து கொண்டு, கால்வாய்க்குள் பாய்ந்தது.

    கால்வாய் நிறைய தண்ணீர் சென்று கொண்டிருக்கும்நிலையில், வேனுக்குள் சிக்கிய ஜெகன்ராஜ் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் கால்வாயில் குதித்து அவரை மீட்டனர். இதுகுறித்து, குலசேகரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai